இவர்கள்தான் என்னுடைய ஹீரோக்கள்; போட்டோவை வெளியிட்ட நடிகை கஸ்தூரி

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (11:31 IST)
சமீக காலமாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பரபரப்பாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நடிகை கஸ்தூரி அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் தன்னுடைய கருத்தால் சர்ச்சையை ஏற்படுத்தி  வருகிறார்.

 
கஸ்தூரியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் வருகின்றன. அதே நேரத்தில் விமர்சனங்களும் வருகின்றன. தற்போது சரவணா ஜவுளிக்கடை அதிபர் சரவணன் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தான் என்னுடைய ஹீரோக்கள் என்று  நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து நடிகை கஸ்தூரி கூறிகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் எனக்கு பிடித்த ஹீரோக்கள் யார் என்று கேட்கிறார்கள்  என்றும் அதற்கு இப்போது பதிலளிக்கிறேன் என்றும் கூறி கஸ்தூரி “சரவணா ஜவுளிக்கடை அதிபர் சரவணன் மற்றும் செல்லூர்  ராஜூ தான் என்னுடைய ஹீரோக்கள்” என்று கூறியுள்ளார். மேலும் அவர்களின் போட்டோவைப் போட்டு #luvv #hero  என்று ஹேஷ்டாக் போட்டுள்ளார்.
 
இவர் உண்மையைதான் சொல்கிறாரா? அல்லது காமெடி செய்கிறாரா என்று தெரியாமல் இவரது டிவிட்டர் ஃப்லோவர்கள்  குழப்பத்தில் இருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்