U சான்றிதழ் பெற்ற தெரு நாய்கள்

Webdunia
சனி, 17 ஜூன் 2017 (12:35 IST)
ஸ்ரீ புவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் "ஐ" கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் தெரு நாய்கள். இதனை அறிமுக இயக்குனர் ஹரி உத்ரா எழுதி இயக்கியுள்ளார்



இத்திரைப்படம் டெல்டா விவசாயக் கிராமங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளின் பிரச்சனையைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு எனவே அதனைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. " வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" எனும் வள்ளலாரின் கருத்தை"தெரு நாய்கள்" திரைப்படம் மூலம் பேசப்படுகிறது என இயக்குனர் உத்ரா கூறியுள்ளார்.

இது போன்ற சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை ஒவ்வொருவரும் தங்கள் திரைப்படத்தின் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது சினிமாவின் வளர்ச்சிக்கு நல்லது எனப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் குழு பாராட்டியுள்ளது.  மேலும் இத்திரைப்படத்தைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக இப்படத்திற்கு "U" சான்றிதழ் வழங்கபட்டுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

 
அடுத்த கட்டுரையில்