ஜப்பானில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்தார் விஜய்

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (07:15 IST)
இளையதளபதி விஜய் நடித்த படங்களில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக 'தெறி' படத்தை கூறலாம். இது உண்மை என்பதை நிரூபிப்பதைபோல கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் 'தெறி' படத்தின் ஒருவருட விழாவை சிறப்புக்காட்சிகள் மூலம் ரசிகர்கள் கொண்டாடியதை கூறலாம்



 


இந்த நிலையில் 'தெறி' படத்தை விரைவில் ஜப்பான் மொழியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுவரை ரஜினியின் படங்கள் மட்டுமே ஜப்பான் மொழியில் வெளியிட்ட நிலையில் தற்போது ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் படமும் ஜப்பான் மொழியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜப்பான் மொழி மட்டுமின்றி  டோக்யோ, ஓசாகா போன்ற மொழிகளிலும் 'தெறி' வெளியாக இருப்பதாகவும், இந்த மொழிகளில் 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி ஜப்பானில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்,.

'தெறி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலை கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்