திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விஷால் சம்பளத்தை குறைக்க தயாரா?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:32 IST)
ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரியை விதித்துள்ள மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடி கிட்டத்தட்ட தோல்வி பெற்றுவிட்ட விஷால், தற்போது திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். பார்க்கிங் கட்டணம் இல்லை, அரசு நிர்ணயம் செய்த விலையில் டிக்கெட், எம்.ஆர்.பி. விலையில் தின்பண்டங்கள் ஆகியவை விஷாலின் கட்டுப்பாடாக உள்ளது.



 
 
இந்த நிலையில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்க விஷால் என்ன அரசாங்கமா? அல்லது முதல்வரா? என்று கேள்வி எழுப்பும் திரையரங்க உரிமையாளர்கள், விஷால் உட்பட அனைத்து நடிகர்களும் சம்பளத்தை குறைக்க தயாரா? என்று கேள்வி கேட்க தயாராகி வருகின்றனர்.
 
ஆறு மாதம் அல்லது ஒருவருடம் நடிக்கும் நடிகர்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.50 கோடி வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு நடுத்தர வர்க்கத்தினர் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பெற முடியாத சம்பளத்தை நடிகர்கள் வாங்குவதால் தான் திரையரங்க கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களும் உயர்கின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு லாபத்தில் பங்கு என்ற வகையில் நடிகர்கள் நடிக்க தயார் என்றால் நாங்களும் விஷால் கூறிய கட்டுப்பாடுகளுக்கும் சம்மதம் தெரிவிக்கின்றோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்