கேளிக்கை வரி ரத்து செய்யும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் கறாராக கூறியுள்ளதால் கடந்த வாரம் எந்த தமிழ்ப்படமும் ரிலீஸ் ஆகவில்லை. இன்று முதல்வருடன் நடக்கும் பேச்சுவார்த்தை இணக்கமாக முடியவில்லை என்றால் தீபாவளிக்கும் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என்று விஷால் கண்டிப்பாக கூறிவிட்டாராம். கேளிக்கை வரி விஷயத்தில் அரசை எதிர்த்து போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அவரது முடிவு
ஆனால் 'மெர்சல்' வெளியாகியே தீரும் என்கிறது விஜய்யின் வட்டாரங்கள். கேளிக்கை வரி என்பது இன்றைய பிரச்சனை அல்ல. துப்பறிவாளன் ரிலீசுக்கு முன்பே ஏன் விஷால் இந்த போராட்டத்தை தொடங்கவில்லை என்றும் துப்பறிவாளன் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்ட பின்னர் ஆரம்பித்துள்ள இந்த போராட்டம் ஒருதலைபட்சமானது என்றும் விஜய் தரப்பில் கூறுகின்றனர்