நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் படுகொலை.. சிறிய தகறாரால் விபரீதம்..!

Siva

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (08:00 IST)
’காலா’ ’வலிமை’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்த நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் ஆசிப் குரேஷி, டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் ஏற்பட்ட வாகன நிறுத்துமிட தகராறில் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 11 மணியளவில் நிஜாமுதீனில் உள்ள ஜங்புரா போகல் தெருவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
முதல்கட்ட விசாரணையில் ஆசிப் தனது வீட்டின் பிரதான வாயிலுக்கு முன்னால் இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக இரு நபர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து, அந்த நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஆசிப்பை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு, ஆசிப் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
ஆசிப்பின் மனைவி மற்றும் உறவினர்கள், ஒரு சிறிய விஷயத்திற்காக குற்றவாளிகள் அவரை ஈவிரக்கமின்றித் தாக்கியதாக குற்றம் சாட்டினர். 
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தேடுதல் வேட்டைக்கு பிறகு இரு குற்றவாளிகளையும் கைது செய்தனர். இது குறித்த மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்