தூய தமிழில் வெளியான சீதக்காதி படத்தின் இரண்டாம் பாடல் !

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (16:39 IST)
வைரலாகும் மக்கள் செல்வனின் சீதக்காதி படத்தின் இரண்டாம் பாடல்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25வது படம்  ‘சீதகாதி’, இது டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். 
 
இப்படத்தில் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்களும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
 
இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இதுவரை   ‘அய்யா’ என்ற பாடலும், படத்தின் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி இருக்கிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடலான "அவன்" பாடலின் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியானது. மதன் கார்க்கி எழுதிய இப்பாடல் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளது. 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்க, ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார்.  
 
‘அய்யா’ பாடலை இயக்குனர் தியாகராஜா குமாரராஜன் தூய தமிழில் எழுதியது போலவே , இந்த 2வது பாடலான  ‘அவன்’ பாடலும் தூய தமிழில் அமைந்துள்ளது .  கடந்த சில வருடங்களாக தமிழ் திரைப்படங்களிலுள்ள பாடல்களில் தமிழ் செய்யுள் நடை என்பது அரிதாகிவிட்ட நிலையில், சீதகாதி படத்தில் வெளியான இரண்டு பாடல்களிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. 
 
மேலும் இந்த படத்தில் 75வயதான நாடக கலைஞராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதால் நாடக மேடை பின்னணியை மக்களுக்கு எளிதில் உணரவைக்க இது போன்று பாடல்களை அமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்