ஹாட்ஸ்டாரில் இரண்டே நாளில் நம்பர் 1 இடத்தை பிடித்த லெஜண்ட் திரைப்படம்!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (14:39 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

வெளியானது முதல் அதிகளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இரண்டே நாளில் நம்பர் 1 நிலைக்கு முன்னேறியுள்ளது லெஜண்ட் திரைப்படம். இதைப் படக்குழு பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்