கொரொனாவால் பாதித்த பிரபல நடிகர்: சின்னத்திரை பிரபலம் விளக்கம்

வெள்ளி, 30 ஜூலை 2021 (18:06 IST)
பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்  கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தற்போது எப்படி உள்ளார் என நடிகர் அருண் நேற்று  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் வேணு அரவிந்த்.  இவர் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இந்நிலையில் அவரது தற்போதைய நிலைகுறித்து சன் டிவில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் நடித்துவரும் நடிகர் அருண் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார், அதில், நடிகர் வேணுமாதவன் விரையில் நலம்பெற்று வீடுதிரும்புவார்..அவருக்காகக் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் தற்போது கோமாவில் இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் வேணு அரவிந்த், கோமாவில் இருப்பதாக வதந்தியைப் பரவவிட்டது மற்றோரு சின்னத்திரை பிரபலம் என தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்