நடிகை யாஷிகா உடல்நிலை குறித்த தகவல்

வெள்ளி, 30 ஜூலை 2021 (18:01 IST)
நடிகை யாஷிகா தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்   நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் யாஷிகா சுய நினைவுக்கு வந்த பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து நடந்த அந்த காரில் இவர்கள் இருவரைத் தவிர இரண்டு ஆண்கள் இருந்ததாகவும், அவர்கள் யார் என்பது வெளியே வரவே இல்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படவே இல்லை என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நடிகை யாஷிகா மருத்துவமனையில்  தீவிரச் சிகிச்சை பிரிவில்  இருந்து சாதாரணவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடலநலம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்