வலிமை ரிலிஸ் தேதி இதுதான்… மோதுவாரா சிவகார்த்திகேயன்?

வெள்ளி, 30 ஜூலை 2021 (17:04 IST)
வலிமை திரைப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இப்போது வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலிஸூக்கு தயாராகியுள்ளது. இன்னும் கடைசிக் கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டியுள்ளது. அதற்காக இப்போது ரஷ்யாவுக்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளது ஹெச் வினோத் தலைமையிலான படக்குழு.

இந்நிலையில் படத்தை அக்டோபர் 14 ஆம் தேதியான ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதே தேதியில்தான் சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்