கமல் பட நாயகியை நடுரோட்டில் இழுத்துபோட்டு அடித்த கொள்ளை கும்பல்

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (11:15 IST)
சென்னையை சேர்ந்தவர் பர்ஹீன். பிரபல நடிகையான இவர்  1993-ல் திரைக்கு வந்த கலைஞன் படத்தில் பிந்தியா என்ற பெயரில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து இருந்தார். மேலும் சில தமிழ் படங்களில் நடித்தார். இந்தியில் பர்ஹீன் என்ற பெயரில் ‘ஜான் தேரே நாம்’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.


 
இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு டெல்லியில் வசித்து வருகிறார்.  பர்ஹீன் அண்மையில் டெல்லியில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு தனது காரில் சென்று கொண்டு இருந்தார்.
 
அப்போது அவரை பின் தொடர்ந்த சிலர் காரில் இருந்த ரூ.16 ஆயிரம், மொபைல் போன், மற்றும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.
 
அவர்களை பர்ஹீன் தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது அவர்கள், பர்ஹீனை சரமாரியாக அடித்து தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். பர்ஹீன் சாலையில் மயங்கி விழுந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்