தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவரது இந்தியன் 2 படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2.
இப்படம் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பல பிரச்சனைகளை எல்லாம் கடந்து, மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை தயாரிப்பு நிறுவனம் எடுத்த நிலையில், 3 வது பாகமும் உருவாகி வருவதாக தகவல் வெளியானது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்புகள்தான் காரணம்.
சமீபத்தில், இந்தியன் 2 படத்தில் நடிகர் கமலின் எஞ்சியுள்ள காட்சிகளுக்கான ஷூட்டிங் நிறைவடைந்தது என படக்குழு அறிவித்தது.
எனவே இப்படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் இறுதி நாளில் இந்தியன் 3 திரைப்படம் பற்றி கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தை கைப்பற்றியுள்ளது. இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் தியேட்டரில் ரிலீஸாகி சில நாட்களுக்கு பின் நெட்பிளிக்ஸில் இப்படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.