என் மீதான அந்த இமேஜை உடையும்: புது உற்சாகத்தில் ராஷி கண்ணா

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (11:59 IST)
திருமதி சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் தங்கவேலு இயக்கியுள்ள ஆக்சன் திரில்லர் படம் அடங்கமறு.  இப்படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி, கதாநாயகியாக ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.



இதில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கதாநாயகியாக வரும் ராஷி கண்ணாவுக்கு இந்த படத்தில் , வெறும் டூயட் பாடும் நாயகியாக இல்லாமல் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ராஷி கண்ணா கூறுகையில், "நான் ஒரு நடிகையாக மாறிய பின்னர் ‘பார்பி கேர்ள்’ என்ற இமேஜை உடைத்து, ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசையாக இருந்தது. அது  அடங்க மறு படத்தில் நடந்திருக்கிறது. உண்மையில், அடங்க மறுவில் என் கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது போல இல்லாமல், படம் முழுக்க பயணிக்கும் ஒரு முழுமையான, வலுவான கதாபாத்திரம். என்னுடைய முழு திறமைகளை வெளிப்படுத்த இந்த படம் உதவியிருக்கிறது. ஜெயம்ரவி உண்மையில் ஒரு திறமையான, ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர்.  மிகவும் எளிமையான, அர்ப்பணிப்பு உள்ள மனிதர்,இயக்குனர் சொல்லும் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு, தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இயக்குனர் கார்த்திக் தங்கவேலு,  ஆக்சன் திரில்லர் படமான அடங்க மறுவில் என் கதாபாத்திரத்தை மிக அழகாக செய்திருக்கிறார்" என்றார்.
 
வரும் டிசம்பர் 21ம் தேதி அடங்க மறு திரைப்படம் திரைக்கு வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்