" டபுள் மீனிங்கில் பேசும்" ராஷி கண்ணாவின் வைரல் வீடியோ!

வியாழன், 6 டிசம்பர் 2018 (14:39 IST)
நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்க நொடிகள் படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ராஷி கண்ணா. 


 
இவர் தற்போது ஜெயம் ரவியுடன்  அடங்க மறு படத்தில் நடித்து வருக்கிறார். இதனை அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்குகிறார். இந்தப் படத்தை 'ஹோம் மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. 
 
இந்த  படம் வரும் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளதால் , படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
இந்நிலையில்தற்போது படத்தின்புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
 
பள்ளியில் படிக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோட்பாடு இருந்தது. கல்லூரியில் படிக்கும் போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று வந்தது. நாளடைவில் நாமே இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று வந்தது என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். 
 
இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், ராஷி கண்ணா கூறுகையில், "தேவைக்கு பயன்படுத்துறவங்கள விட, சந்தோஷத்துக்கு பயன்படுத்துறவங்க தான் அதிகம்' என்று கூறியுள்ளார்.

இந்த விடியோவை பார்த்த ராஷி கண்ணாவின் ரசிகர் ஒருவர் "ஒத்த ரோஜா உங்க பொன்ன ரொம்ப அருமையா வளர்த்திருக்கீங்கமா" என கலாய்த்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்