பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது தர்ஷன் வெளியேற்றப்பட்ட தினத்தில் தன்னுடைய ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் தர்ஷன் தான் ஹீரோ என்றும் கமலஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கான ஒப்பந்தத்தையும் அவர் தர்ஷனிடம் அதே மேடையிலேயே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆறு மாதங்களாக கமல் கூப்பிடுவார் என காத்திருந்த தர்ஷன் அதன் பின்னர் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவர இருப்பதாகவும் இந்த படம் ஒரு பிரம்மாண்டமான படம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தர்ஷன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் கமல் படம் குறித்து தர்ஷன் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது