”தங்க்யூ நெய்வேலி” என்று ரசிகர்களுடன் தான் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் பகிர்ந்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் படபிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்ற நிலையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதற்காக விஜய்யை படபிடிப்பின் இடையிலேயே சென்னைக்கு அழைத்து சென்றனர். பின்பு அவரது வீட்டில் சோதனை செய்த நிலையில் கணக்கில் வராத எந்த ஆவணங்களும் பணமும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் மீண்டும் விஜய் படபிடிப்பில் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று நெய்வேலியில் ரசிகர்கள் கூட்டம் திரண்ட நிலையில், ஒரு வேன் மீது ஏறி நின்று விஜய் செல்ஃபி எடுத்தார். இன்று மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் தான் எடுத்த புகைப்படத்தை "Thank you Neyveli" இன்று வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.