யுவன் இசையோடு விஜய் 68 படத்தின் பூஜை வீடியோ கம்மிங் சூன்!

திங்கள், 23 அக்டோபர் 2023 (07:48 IST)
லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த மாதம் முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் இப்போது விஜய் 68 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட படக்குழு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.  இந்த வீடியொவுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது ஆச்சர்யத்தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்