விஜய்யின் 'லியோ' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்

சனி, 21 அக்டோபர் 2023 (20:55 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) இன்று  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலீட்டிய நிலையில் இப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலீட்டியதாக தகவல் வெளியாகிறது.

இந்த  நிலையில், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கிய மாரி  செல்வராஜ் லியோ படத்தை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தளத்தில், ‘’நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ளதை திரையில் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்