இதுவுமா..! தளபதி 63-யும் திருட்டுக்கதை?

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (18:24 IST)
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 

 
பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். 
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள அத்தனை படங்களும் பழைய படங்களில் இருந்து தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொஞ்சம் கதையை மாற்றியமைத்து மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கிவிடுவார். அதனாலே இவரை திருட்டு கதை இயக்குனர் என படுமோசமாக விமர்சிக்க தொடங்கினர் நெட்டிசன்ஸ். ஆனால், திருட்டு கதையை தத்ரூபமாக இயக்கி வெற்றி காண்பதற்கும் ஒரு திறமை வேண்டும் அது என்னிடம் இருக்கிறது அதனால் யாரும் என்னை குற்றம் சொல்ல முடியாது என்று கூறி சமாளித்து வந்தார் அட்லீ. 
 
இந்நிலையில்,  தற்போது தளபதி 63 படமும் திருட்டுக் கதை தான் என கூறப்படுகிறது. உதவி இயக்குனர் ஒருவர் அட்லியின் நண்பரிடம் கூறிய கதையை தான் தற்போது தளபதி 63 படமாக எடுக்கப்பட்டு வருவதாக புது பஞ்சாயத்து கிளம்பி உள்ளது. 
 
சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் விஜய் படங்கள் வெளிவருகிறது என்றாலே சம்மந்தப்பட்டவர்கள் வேட்டியை மடித்துக்கட்டி ரகளையில் ஈடுபட்டு படத்திற்கு தானாகவே விளம்பரத்தை தேடித்தந்தது படத்தை வெற்றியடைய செய்துவிடுவார்கள். 
 
குறிப்பாக படம் வெளியாகும் போது தான் கதை பஞ்சாயத்துக்கள் ஓடும், ஆனால் தற்போது தளபதி 63 படப்பிடிப்பு நடக்கும் போதே பஞ்சாயத்து கிளம்பிவிட்டது. ஆக படம் திருட்டு கதையாக இருந்தாலும் நிச்சயம் வெற்றியடைந்திடும் என்கிறது ஒரு குரூப். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்