லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் 50-50 படமாக இருந்தது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தளபதி 67 படம் அது மாதிரி இருக்காது என்று முழுக்க முழுக்க அது தன்னுடைய படமாகத்தான் இருக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னணி ஊடகமொன்று இயக்குனர்கள் உடன் கூடிய கலந்துரையாடலை நடத்திய நிலையில் இதில் தளபதி 67 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து சில தகவலை கூறினார்.
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை நான் இயக்கியபோது விஜய்க்காக சில காட்சிகள் வைத்தேன் என்றும், அதனால் அந்த படம் 50-50 படமாக இருந்தது. என்றும், ஆனால் தளபதி 67 இந்த படம் முழுக்க முழுக்க தன்னுடைய படமாகத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்