தளபதி 66 பூஜையில் கலந்துகொள்ளும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (16:23 IST)
தளபதி 66 படத்தின் பூஜை தசரா பண்டிகையின் போது நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தின் பூஜை தசரா பண்டிகையை ஒட்டி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்