’தளபதி 66’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் அறிவிப்பு!

ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (16:22 IST)
தளபதி 66’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் அறிவிப்பு!
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஒரு பக்கம் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தளபதி விஜய்யின் 66வது படப்பிடிப்பு குறித்த ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

Official #Thalapathy66

Joining hands for the first time @actorvijay and @directorvamshi @SVC_official @DilRajuProdctns #DilRaju#VamshiPaidiPally pic.twitter.com/1tg1w7gMMY

— Diamond Babu (@idiamondbabu) September 26, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்