ஓடிடியில் வெளியானது தலைவி! – அமேசானில் நான்கு மொழிகளில் வெளியீடு!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (11:16 IST)
இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த தலைவி படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த படம் பல்வேறு சிக்கல்களை தாண்டி திரையரங்குகளில் வெளியானது. எனினும் சில காட்சிகள் ஆட்சேபணைக்குரியதாக உள்ளதாக அதிமுகவினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் இன்று தலைவி படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்