வசூலிலாவது திருப்தி அளித்ததா தலைவி… 3 நாள் வசூல் விவரம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:09 IST)
கங்கனா ரனாவத் நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்ட தலைவி திரைப்படம் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் தலைவி திரைப்படம் ரிலீஸானது.

இந்த படம் விமர்சன ரீதியாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதாவது பரவாயில்லை வசூலிலும் மிக மோசமாக உள்ளதாம். தமிழ்நாட்டில் மொத்தமாக 3 நாட்களிலும் சேர்த்து 3.8 கோடி ரூபாய்தான் வசூல் செய்துள்ளதாம். வரும் நாட்கள் வேலை நாட்கள் என்பதால் படிப்படியாக வசூல் குறையவே வாய்ப்பு என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்