எம்ஜிஆர் நினைவு நாளில் ‘தலைவி’ படக்குழு செய்யப்போவது இதுதான்!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (19:51 IST)
எம்ஜிஆர் நினைவு நாளில் ‘தலைவி’ படக்குழு செய்யப்போவது இதுதான்!
நாளை எம்ஜிஆர் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் தலைவி படக்குழுவினர் எம்ஜிஆர் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளனர் 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தலைவி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதம் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கேற்ற வகையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்துள்ள அரவிந்த்சாமியின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. நாளை எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி இந்த போஸ்டர் வெளியாக இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே இந்த படத்தில் எம்ஜிஆர் போலவே தத்ரூபமாக அரவிந்த்சாமி நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் நாளை வெளியாகும் இந்த போஸ்டர் எம்ஜிஆர் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்