மும்பையில் அமிதாப் பச்சன் சம்மந்தப்பட்ட காட்சிகள்… கிளம்பிய தலைவர் 170 படக்குழு!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (08:04 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழுவினர் ரஜினியோடு திருவனந்தபுரத்துக்கு சமீபத்தில் சென்றனர். அங்கு ரஜினியை வைத்து சில காட்சிகளை படமாக்கிய நிலையில் இன்றோடு முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழு மும்பைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு அமிதாப் பச்சன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தும் , அமிதாப் பச்சனும் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்