அப்படி அவர் இயக்கிய கடைகுட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது அவரின் தலைவன் தலைவி படம் ரிலீஸாகி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 51 கோடி ரூபாய் வசூலித்துக் கலக்கியது..
இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க யோகிபாபு, சரவணன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.