அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? நடிகை தபு விளக்கம்!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (17:04 IST)
தெலுங்கில் அலா வைகுந்தபுரம்லூ திரைப்படத்தில் நடிக்க சம்மதித்தது ஏன் என நடிகை தபு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை தபு 48 வயதிலும் பாலிவுட் படங்களில் கதாநாயகனுக்கு இணையான வேடங்களில் நடிக்கிறார். கடைசியாக அவர் நடித்த அந்தாதூன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு தெலுங்கில் அலா வைகுந்தபுரம்லூ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்தார்.

இதுபற்றி அவர் இப்போது விளக்கமளித்துள்ளார். அதில் ‘என் கதாபாத்திரத்தின் அளவு தெரிந்தே நடித்தேன். இயக்குனர் த்ரிவிக்ரம்முடன் பணியாற்ற ஆவலாக இருந்தேன். யஷோதா கதாபாத்திரத்தை எளிதில் யாருக்கும் பிடிக்காது. அந்த படத்தில் ஜெயராம் கதாபாத்திரம் தன் மனைவியின் ஆளுமை பற்றி பேசும். அதற்காகவே அந்த படத்தில் நடித்தேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்