தமிழுக்கு வருகிறது தெலுங்கில் ஹிட்டடித்த ‘பேபி’ திரைப்படம்!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (12:03 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. அவரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா மிடில் கிளாஸ் மெமரீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து பேபி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆனது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 90  கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கலக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தமிழில் இளம் நடிகர் ஒருவரை வைத்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்