தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கலைப்பு – புதிய அதிகாரியை நியமித்தது அரசு !

சனி, 27 ஏப்ரல் 2019 (15:57 IST)
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விதிமீறல் நடந்திருப்பதாகவும் அதனால் விஷால் தலைமையிலான நிர்வாகம் கலைக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்று பொறுப்பு வகித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கணக்கு வழக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கபபட்டது.

புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கலான வழக்குகளின் அடிப்படையில், சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டது. அரசு அந்த் அறிக்கையின் படி விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நோட்டிஸ் அனுப்பியது. கொடுக்கப்பட்ட 30 நாள் அவகாசத்தில் விஷால் தரப்பினர் அளித்த பதில் ஏற்கத்தக்கதாக இலலை எனக்கூறி விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தைக் கலைத்தும் சங்க நிர்வாகங்களை இனிக் கவனிக்க என்.சேகர் என்ற அதிகாரியையும் நியமித்துள்ளது. இனி சங்கத்து சார்பில் நடைபெறும் அனைத்துப் பணிகளும் அவரது மேற்பார்வையில் தான் நடைபெறும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்