நேற்றைய ரிலீஸில் ரசிகர்களைக் கடந்த படம் எது?

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (10:27 IST)
நேற்று தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் திரையரங்கில் வெளியாகின. இதில் எந்த படமும் ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை என்பதே சோகம்.

த்ரிஷா நடித்த ராங்கி, பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடித்த செம்பி, ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா மற்றும் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் ஆகிய நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின.

இந்த நான்கு படங்களில் எந்தவொரு படமும் ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவாகவே வருடக் கடைசியில் வெளியாகும் படங்கள் சூப்பராக இருந்தால் தவிர, ரசிகர்களின் ஆதரவைப் பெறாது. ஏனென்றால் நியு இயர் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்க தொடங்குவார்கள். அந்த விதத்தில் நேற்றைய நான்கு ரிலிஸ்களில் ஒன்று கூட ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்