FDFS விமர்சனங்களுக்கு அனுமதிக்காதீர்கள்… தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தல்!

vinoth
புதன், 20 நவம்பர் 2024 (14:20 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம்  கடந்தவாரம் உலகம் முழுவதும் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது திரையரங்குகளில் எடுக்கப்பட்ட முதல் நாள் முதல் காட்சி விமர்சனங்கள்தான்.

கங்குவாவுக்கு மட்டும் இல்லாமல் இந்தியன் 2, கோட் மற்றும்  வேட்டையன் ஆகிய படங்களுக்கும் இதே நிலைதான். இதையடுத்து திருப்பூர் சுப்ரமணியன் “தியேட்டர்களுக்கு யுடியூப் ரிவ்யூவர்களை நாமே அனுமதிப்பது நமது தொழிலை நாமே கெடுத்துக் கொள்வது போலதான். அவர்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்காதீர்கள். இரண்டு வாரங்களுக்கு எந்த படத்தின் விமர்சனங்களும் வரக்கூடாது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதேக் கருத்தை இப்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் தெரிவித்துள்ளது. பல படங்களின் வசூலை இந்த விமர்சனங்கள் பாதிப்பதால் FDFS பப்ளிக் ரிவ்யூ  நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்