பாலிவுட் நடிகருடனானக் காதலை பிரேக் அப் செய்தாரா தமன்னா?

vinoth

புதன், 5 மார்ச் 2025 (08:51 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது. காதலர் விஜய் வர்மாவுடன் வசித்து வரும் தமன்னா பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

சமீப ஆண்டுகளாக இந்தி சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா.  மேலும் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவுடன் காதலிலும் இருந்தார். இருவருமே அந்த காதலை வெளிப்படுத்தி உறுதிப்படுத்தினர். விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இருவரும் நண்பர்களாக மட்டும் தொடரலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்