கோமாதா கோமியத்தை வித்துக்கூட வாழலாம்! வசனத்தால் வந்த சர்ச்சை - தமன்னாவின் ஒடெலா 2 ட்ரெய்லர் ரியாக்‌ஷன்!

Prasanth Karthick

புதன், 9 ஏப்ரல் 2025 (08:46 IST)

தமன்னா நடித்துள்ள தெலுங்கு படமான ‘ஒடெலா 2’ படத்தின் ட்ரெய்ல் தமிழில் வெளியாகியுள்ள நிலையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் தமன்னா முதன்முறையாக ஒரு படத்தில் சாமியாராக நடித்துள்ளார். ஒடெலா 2 என்ற இந்த படத்தை சம்பத் நந்தி எழுதி அஷோக் தேஜா இயக்கியுள்ளார். 

 

இந்த படத்தில் தமன்ன்னாவுடன், ஹெபா பட்டேல், வசிஷ்ட சிம்ஹா, முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும் நிலையில் அதன் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 

முழுக்க முழுக்க மாய, மந்திரம், கடவுள் சக்தி உள்ளிட்ட பேண்டஸி விஷயங்கள் மீது புனையப்பட்டிருக்கிறது இந்த கதை, இதில் தமன்னா சிவ வழிபாடு செய்யும் சிவசக்தி என்ற சாமியாராக வருகிறார். ஒரு ஊரில் அரக்க சக்தி ஒன்று வெளிபட்டு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அங்கு செல்லும் சிவசக்தி தனது கடவுள் சக்தி உதவியால் எப்படி அந்த தீய ஷக்தியை அழிக்கிறாள் என்பதுதான் கதை என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது புரிகிறது.

 

அதில் ‘உயிர்வாழ கோமாதாவை கொல்ல வேண்டியதில்லை. அதன் கோமியத்தை விற்றுக் கூட வாழலாம்’ என்று தமன்னா பேசும் வசனங்கள் மாட்டிறைச்சி உண்பவர்களை தாக்கும் விதமாக உள்ளதாக இப்போதே சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்