12 வருடங்களாகத் தக்கவைத்த தமன்னா!!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (12:08 IST)
தமன்னா சினிமாவுக்கு வந்து 12 வருடங்களுக்கு மேலேயே ஆகிவிட்டது. ஆனாலும், ஹீரோயின் அந்தஸ்தை இன்னும் தக்க வைத்துள்ளார்.


 
 
2005 ஆம் ஆண்டு ஹிந்திப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் தமன்னா. அதே ஆண்டு, தெலுங்குப் படம் ஒன்றிலும் அறிமுகமானார். 
 
அடுத்த ஆண்டே ‘கேடி’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்தவர், அவ்வப்போது ஹிந்திப் படங்களிலும் நடித்தார்.
 
த்ரிஷா, நயன்தாரா என ஓரிருவரே 10 வருடங்களைக் கடந்தும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவே நடித்து வருகின்றனர். அந்த வரிசையில், 12 வருடங்களைக் கடந்த தமன்னாவும் இணைந்துள்ளார். 
 
சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, விக்ரம் ஜோடியாக ‘ஸ்கெட்ச்’ என இப்போதும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் தமன்னா.
அடுத்த கட்டுரையில்