விரைவில் வெளியாகிறது ‘விஸ்வரூபம் 2’ பாடல் வரிகள்

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (11:53 IST)
‘விஸ்வரூபம் 2’ படத்தின் பாடல் வரிகள் விரைவில் வெளியிடப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 


 
 
கமல் இயக்கத்தில், கமல், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘விஸ்வரூபம்’. இதன் இரண்டாவது பாகத்தை அந்த வருடமே எடுக்கத் தொடங்கினார் கமல். ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக, பாதியிலேயே படம் நின்றது.
 
இந்நிலையில், பணத்தைக் கொடுத்து படத்தை வாங்கி, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைக் கவனித்து வருகிறார் கமல். இந்தப் படத்தின் கடைசி பாடலையும் ரெக்கார்ட் செய்து முடித்துவிட்டார் கமல். இந்தப் பாடலுக்கான ஹிந்தி வெர்ஷன் வரிகளை பிரசூன் ஜோஷி எழுத, தமிழில் கமலே எழுதியிருக்கிறார். தெலுங்கு வெர்ஷனுக்கு ரெக்கார்டிங் விரைவில் தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ள கமல், இந்தப் பாடலின் வரிகளை ட்விட்டரில் சீக்கிரமே வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
 
‘விஸ்வரூபம்’ படத்துக்கு, ஷங்கர் மஹாதேவனுடன் இணைந்து லாய் மெண்டோன்சா, நூரனி ஆகியோர் இசையமைத்திருந்தனர். ஆனால், இரண்டாம் பாகத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக கமல் படத்துக்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான்.
அடுத்த கட்டுரையில்