பிரபுதேவாவுடன் மறுபடியும் இணையும் தமன்னா

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (16:59 IST)
‘தேவி’ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா – தமன்னா ஜோடி மறுபடியும் ஒரு படத்தில் இணைகிறது.
 


 

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா – தமன்னா நடித்த படம் ‘தேவி’. பேய்ப்படமான இது, தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியானது. இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சக்சஸ் ஜோடியான இருவரும் இன்னொரு தமிழ்ப் படத்தில் இணைந்துள்ளனர். சக்தி சிதம்பரம் இயக்கும் ‘சார்லி சாப்ளின்’ இரண்டாம் பாகம்தான் அது.

2002ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தில், பிரபுதேவா, லிவிங்ஸ்டன், அபிராமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காமெடிப்படமான இது, சூப்பர் ஹிட்டானது. எனவே, இந்தப் படத்தை தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி என 6 மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்