Talku Lessu Worku Moreu - பட்டைய கிளப்பும் சாம் - சிவாங்கி!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (11:03 IST)
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாம் - சிவாங்கி பாடியுள்ள Talku Lessu Worku Moreu என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சாந்தனு. இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கே.பாக்யராஜூம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மனோபாலா, மதுமிதா, யோகி பாபு, ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். 
 
தரன்குமார் இசையில் மேஷ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தை லிப்ரா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஏதோ சொல்ல என்ற பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியானது. இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. 
 
”Talku Lessu Worku Moreu” என்கிற பாடல் தற்போது வெளியாக இருக்கிறது. இந்த பாடலை கு.கார்த்தி எழுத சிவாங்கி மற்றும் சாம் விஷால் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ இந்த பாடல்... 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்