டாம்பாய் லுக்கில் பிரியா பவானி சங்கர்!

வெள்ளி, 28 மே 2021 (08:34 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் ஜீன்ஸ் மற்றும் ஷர்ட் அணிந்து எடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வரிசையாக சமுகவலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வரவேற்பைப் பெற்றுவரும் அவர், இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீல நிற ஜீன்ஸும், வெள்ளைக் கலர் சட்டையும் அணிந்து டாம்பாய் போல அவர் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்ற அது வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்