தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வரும் டாப்ஸி பன்னு பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி தனது உடலை ஆண் நடிகர் போன்றே கட்டுக்கோப்பாகவும் அதே நேரத்தில் மிகவும் அழகாகவும் மெயின்டைன் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் முரட்டு உடலை காட்டி போஸ் கொடுத்து மெர்சலாக்கியுள்ளார்.