வஞ்சம் தீர்த்தாயடா படத்துக்கு வித்தியாசமாக கதாநாயகன் தேடும் சுசி கணேசன்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (10:23 IST)
இயக்குனர் சுசி கணேசன் இப்போது வஞ்சம் தீர்த்தாயடா என்ற படத்தை இயக்க உள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளரான சுசிகணேசன் பைவ் ஸ்டார் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய திருட்டு பயலே திரைப்படம் அவருக்கு கவனத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பின்னர் இயக்கிய கந்தசாமி உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் அவர் மி டூ சர்ச்சையிலும் சிக்கியதால் அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது அவர் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார். அந்த படத்துக்கு வஞ்சம் தீர்த்தாயடா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை இயக்குனர் சுசி கணேசன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் இரண்டு கதாநாயகர்களையும் வித்தியாசமான முறையில் தேடி வருகிறார் இயக்குனர் சுசிகணேசன். நடிப்பில் ஆர்வமுள்ள 20 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் 4vmaxtv.com என்ற இணையத்தில் வீடியோக்களை பதிவேற்ற சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்