சோனியா காந்தி கேரக்டரில் நடிக்கும் ஜெர்மனி நடிகை

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (20:43 IST)
சமீபகாலமாக விஐபிக்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாக்குவதில் இந்திய திரையுலகம் ஆர்வம் காட்டி வருகிறது .பிரதமர் மோடி உள்பட பலரது வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி, உருவாக்க திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் உருவாகவுள்ளது.

தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தில் சோனியா காந்தியின் கேரக்டரும் முக்கியத்துவம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சோனியா காந்தி கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சூசன் பெர்னெர்ட் என்ற ஜெர்மனி நடிகை சோனியா காந்தியாக நடிக்கவிருக்கிறார். இவர் ஜெர்மனியை சேர்ந்தவர் என்றாலும் இவர் அகில் மிஷ்ரா என்ற இந்திய நடிகரைத் திருமணம் செய்துள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே பல இந்தியப் படங்களிலும், பல்வேறு மொழி டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்