’விக்ரம்’ படக்குழுவினர்களுடன் சூர்யா: லோகேஷ் பகிர்ந்த புகைப்படம்!

புதன், 18 மே 2022 (20:02 IST)
’விக்ரம்’ படக்குழுவினர்களுடன் சூர்யா: லோகேஷ் பகிர்ந்த புகைப்படம்!
விக்ரம் படக்குழுவினர்கள் உடன் சூர்யா இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது 
 
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது 
 
இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் விக்ரம் பட குழுவினருடன் சூர்யா இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்