சூர்யா 47 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுஷின் ஷ்யாம்!

vinoth

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (08:10 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ படத்துக்குப் பிறகு  சூர்யா சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘வேட்டைக் கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து லக்கி பாஸ்கர் புகழ் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘சூர்யா 46’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்குப் பிறகு சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் சூர்யா அடுத்து ரோமாஞ்சம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மலையாள சினிமாவின் அனிருத் என வர்ணிக்கப்படும் சுஷின் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். சூர்யா படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்