தேர்தலில் போட்டியிடுகிறாரா நடிகர் சூர்யா? ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை!

Prasanth K

புதன், 20 ஆகஸ்ட் 2025 (14:21 IST)

நடிகர் சூர்யா எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை மறுத்து சூர்யா ரசிகர் மன்றத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

அந்த அறிக்கையில் “ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.

கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி!

அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by All India Suriya Fans Club (@suriya_aisfc)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்