நேரடி மலையாள திரைப்படத்தில் சூர்யா: இயக்குனர் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (17:38 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் நேரடி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சூர்யா நேரடி மலையாள படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். 
 
இன்று கேரளாவில் எதற்கும் துணிந்தவன் படத்தின் புரமோஷன் விழா நடைபெற்ற நிலையில் அந்த விழாவில் நடிகர் சூர்யா, சூரி, இயக்குனர் பாண்டிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமல் நீரத் தன்னிடம் ஒரு கதை கூறியதாகவும் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் இந்த படத்தில்தான் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார் 
 
மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான அமல் நீரத் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்