சூர்யா & கார்த்திக் சுப்பராஜ் படத்தின் ஷூட்டிங் எப்போது?

vinoth

திங்கள், 22 ஏப்ரல் 2024 (10:52 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக இருந்த நிலையில் தற்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தகவலோ அந்த படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக சொல்கிறது.

இந்நிலையில் கடந்த மாதம் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் பற்றி புதிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளராக திருவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்