மீண்டும் மீண்டுமா?... கங்குவா படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் தொடக்கம்!

vinoth

வியாழன், 18 ஏப்ரல் 2024 (08:19 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வி எஃப் எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது என சொல்லப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாம். ஆனால் இந்த ஷூட்டிங் நடிகர்கள் யாரும் நடிக்கவில்லையாம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுக்காக தேவையான சில ஷாட்களை இப்போது இயக்குனர் சிறுத்தை சிவா படமாக்கி வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்