சூர்யா ரசிகர்களுக்கு உதவிய விஜய்-ன் நண்பர்

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (23:41 IST)
சூர்யாவில் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபியை ரிலீஸ் செய்த விஜய்யின் நண்பர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது, பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா40 படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் கடந்த வாரம்  ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 23 ஆம்தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் common dp ஐ உருவாக்கியுள்ளனர். 

இதை இன்று நடிகர்கள் விஜய்யின் நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்